(Photos) காத்தான்குடி தளவைத்தியசாலையின் “உறவின் உதயம்” உளநலப்பிரிவு இன்று திறந்து வைப்பு

0
20

(முஹம்மட் பயாஸ்)

Kattankudy Base Hospital Wardகாத்தான்குடி தளவைத்தியசாலையில் உளநலப்பிரிவு இன்று (14) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு காத்தான்குடி தளவைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.எஸ். ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மீழ்குடியேற்ற, புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உளநலப்பிரிவினை திறந்து வைத்ததுடன் சுகாதார சேவைகள் அமைச்சின் பிரதிப்பொது முகாமையாளர் வைத்தியர் லக்ஸ்மி சீ. சோமதுங்க, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.பீ. வெதகதர உட்பட பிரபல வைத்தியர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது, வருகை தந்த அதிதிகளினால் வைத்தியசாலையின் எதிர்கால நடவடிக்கை மற்றும் தற்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் சிறப்புறையாற்றப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பிரதம அதிதி இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ஏணைய அதிதிகளுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Kattankudy Base Hospital Ward 2

WhatsApp-Image-20160514 (1) WhatsApp-Image-20160514 (3) WhatsApp-Image-20160514

LEAVE A REPLY