ஹஜ் 2016 : புதிய திட்டங்கள் அறிமுகம்; கட்டணமும் குறைவடையும்

0
301

Hajj masjid al haram 4இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களில் முற்­றிலும் புதிய நடை­மு­றை­யினை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு ஹஜ் குழு திட்­ட­மிட்­டுள்­ளது. ஹஜ்­ஜா­ஜி­களின் நலன் கரு­தியும் ஹஜ் கட்­ட­ணத்தில் சரி­வினை ஏற்­ப­டுத்தி குறைந்த கட்­ட­ணத்தில் பயணம் மேற்­கொள்ளும் வகை­யிலே இத்­திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­திட்­டத்தின் கீழ் இவ்­வ­ருட ஹஜ் பய­ணத்­துக்­காக தெரிவு செய்­யப்­படும் ஒவ்­வொரு ஹஜ் யாத்­தி­ரீ­க­ருக்கும் இவ்­வ­ரு­டத்­துக்­கென நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­களின் பெயர் விலா­சங்­க­ள­டங்­கிய விப­ரக்­கொத்­தொன்று கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­களம் இவ்­வ­ரு­டத்­துக்­கென தெரிவு செய்­யப்­படும் முகவர் நிலை­யங்­க­ளி­ட­மி­ருந்து ஹஜ் கட்­டணப் பொதிகள் (Package) வழங்­கப்­படும் சேவைகள் பற்­றியும் தக­வல்­களைத் திரட்டி அத்­த­க­வல்­களை ஹஜ் யாத்­தி­ரீ­கர்­க­ளுக்கு வழங்­க­வுள்­ளது.

இம்­மு­றையின் மூலம் ஹஜ் பயணி குறைந்த கட்­ட­ணத்­தி­லான சிறந்த சேவையை வழங்கும் முகவர் நிலை­யத்­தி­னூ­டாக பயண ஏற்­பா­டு­களைச் செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்­ப­டு­கி­றது.

இது தொடர்பில் ஹஜ் குழு அங்­கத்­த­வரும் முஸ்லிம் சமய மற்றும் தபால் சேவைகள் அமைச்­சரின் செய­லா­ள­ரு­மான எம்.எச்.எம்.பாஹிம் கருத்துத் தெரி­விக்­கையில் ‘நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள புதிய நடை­மு­றையின் கீழ் ஹஜ் யாத்­தி­ரி­கர்களே பெரிதும் பய­ன­டை­ய­வுள்­ளனர்.

பல முகவர் நிலை­யங்கள் தம்மால் இவ்­வ­ருடம் 4 இலட்­சத்து 50 ஆயிரம் ரூபா­வுக்கும் குறை­வான கட்­ட­ணத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள முடி­யு­மென உறு­தி­ய­ளித்­துள்­ளன.

குறிப்­பாக இவ்­வ­ருடம் ஓர் உடன்­ப­டிக்­கை­யொன்றும் தயா­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது. இது முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­களம், ஹஜ்­குழு, ஹஜ் யாத்­தி­ரிகள் ஆகிய மூன்று தரப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான உடன்­ப­டிக்­கை­யாகும்.

இந்த உடன்­ப­டிக்­கையில் மூன்று தரப்­பி­னரும் கையொப்­ப­மி­டுவர் உடன்­ப­டிக்­கையில் ஹஜ் பொதி தொடர்­பான விளக்­கங்கள் வழங்­கப்­ப­ட­வுள்ள சேவைகள் என்­பன குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். இந்த உடன்­ப­டிக்கை ஹஜ் முக­வ­ரினால் மீறப்­பட்டால் அதற்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றார்.

இதேவேளை கடந்த வருடம் ஹஜ் கடமையை மேற்கொண்ட ஹஜ்ஜாஜிகளினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஹஜ் விசாரணைக்குழு தனது அறிக்கையை ஹஜ் குழுவிடம் கையளித்துள்ளது.

அந்த விசாரணை அறிக்கை ஹஜ்குழுவினால் ஆராயப்பட்டு வருகிறது.

#Vidivelli

LEAVE A REPLY