உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

0
154

tap waterஉணவருந்தாமல் கூட மாதக்கணக்கில் உயிர் வாழ்ந்துவிட முடியும். ஆனால், தண்ணீர் அருந்தாமல் உங்களால் இரண்டு நாட்களை கூட தாண்ட முடியாது. உடலில் தண்ணீர் வறட்சி அதிகரிக்க, அதிகரிக்க, உடல் உறுப்புகளின் செயலாற்றல் குறைய ஆரம்பிக்கும்.

இரத்த ஓட்டத்தில் இருந்து மூளை, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என அனைத்து உடல் பாகங்களும் ஒவ்வொன்றாக ஸ்தம்பிக்க ஆரம்பிக்கும். இதனால், தான் சரியான நேர இடைவேளையில் தண்ணீர் அருந்த வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பரவலாக ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் அளவு தண்ணீர் அனைவரும் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது. அவரவர் உடல் எடைக்கு ஏற்ப தான் நீரை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், அளவுக்கு மீறி தண்ணீர் பருகுவதால் உடல்நல சீர்கேடுகள் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

எனவே, உங்கள் உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என தெரிந்துக் கொள்ளுங்கள்….

45 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 1.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

50 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

55 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

60 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

65 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

70 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 2.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

75 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.2 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

80 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.5 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

85 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.7 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

90 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 3.9 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

95 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.1 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

100 கிலோ வரை உடல் எடை கொண்டிருப்பவர்கள் தினமும் 4.3 லிட்டர் அளவு சராசரியாக தண்ணீர் அருந்த வேண்டும்.

LEAVE A REPLY