வங்காளதேசத்தில் இடி-மின்னலுடன் மழை: 24 மணி நேரத்தில் 42 பேர் பலி

0
136

201605132114308553_Lightning-in-Bangladesh-kills-42_SECVPFவங்காளதேசத்தில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இடி, மின்னல் மற்றும் புயலுடன் கோடைமழை பெய்வதுண்டு. அவ்வகையில், தலைநகர் டாக்கா உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கோடை வெயிலின் உக்கிரத்தை தணித்ததால் இந்த மழையை மக்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், இடி மின்னலுடன் திடீரென பெய்த இந்த மழை, வழக்கத்துக்கு மாறான அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மட்டும் 12 மாவட்டங்களில் 33 பேர் பலியாகினர். பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று மேலும் 9 பேர் மின்னல் தாக்கி பலியாகினர். இதன்மூலம், 24 மணி நேரத்தில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உள்பட 42 பேர் பலியாகி உள்ளனர்.

மின்னல் தாக்கி பலியாகும் அனைத்து தகவல்களும் ஊடகங்கள் மூலம் வெளியாகாதபோதும், ஒவ்வொரு ஆண்டும் மின்னல் தாக்கி 300 பேர் வரை பலியாவதாக வானிலை மைய அதிகாரி கூறுகிறார்.

நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ, புயல் காற்றோ வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்திருந்தது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மழை பெய்யலாம் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY