மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 181 வேலைத் திட்டங்களுக்கு 224.25 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடு

0
145

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

1-DSC_9934மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேசத்தின் 2016 இவ் வருடத்திற்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (12) வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து ஸ்ரீநேசன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும், பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலி சாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் வி.தவராஜா ,கிழக்கு மாகாண சபை தவிசாளரும், கிழக்கு மாகாண உறுப்பினருமான என். இந்திரகுமார் பிரசன்னா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஷிப்லி பாறூக், இரா. துரைரெத்தினம், கோவிந்தன் கருணாகரன், ஞா. கிருஷ்ணபிள்ளை, எம். நடராஜா உட்பட திணைக்களத் தலைவர்கள், பொலிசார், அரச அதிகாரிகள், மாநகர சபை, மின்சார சபை உள்ளிட்ட சபைகளின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC_9985இதன் போது கடந்த 2015ம் அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன் 2016 இவ் வருடத்திற்காக அனுமதிக்கப்பட வேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான அனுமதிகளும் மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுவினால் வழங்கப்பட்டது.

அத்தோடு 2016 இவ்வாண்டில் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமுல்படுத்தப்படவுள்ள 181 திட்டங்களுக்கு அமைச்சுக்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை ஒதுக்கீடுகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் நிதிகளின் மூலம் 224.25 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சதிஷ்குமார் தெரிவித்தார்.

இங்கு சமுர்த்தி, விவசாயம், கால்நடை, மீன்பிடி, வீதி, வீடு, நீர் வழங்கல், மின்சாரம், தொடர்பாடல், போக்குவரத்து, கல்வி,சுகாதாரம், கைத்தொழில், அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0022

LEAVE A REPLY