நாட்டின் பல பகுதிகளில் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் சாத்தியம்

0
141

Rainy-nightநாட்டின் வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை மேலும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த குழப்பநிலை படிப்படியாக தாழமுக்கமாக மாறி, நாட்டிலும், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியங்களிலும் வானிலையில் தாக்கம் செலுத்துமென எதிர்ப்பார்ப்பதாக திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக நாளை (15) முதல் 18 ஆம் திகதி வரை, நாட்டிலும், கடற் பிராந்தியங்களிலும் கடும் காற்று மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டார்.

இரத்தினபுரி, அயகம, கிரிஎல்ல, பெல்மதுளை, எஹெலியகொட, பலாங்கொடை மற்றும் இம்புல்பே ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#News1st

LEAVE A REPLY