சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூரில் ஆர்ப்பாட்டம்

0
98

Protest_logoதிருகோணமலை, சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூர் – புளியடி சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.

மூதூர் பசுமைக் குழுவினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

தோப்பூரைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் ஆராய்ந்து, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

#News1st

LEAVE A REPLY