இலவச உம்றா திட்டத்தின் 3ம் கட்ட பயணத்திற்கான ஆவணங்கள் கையளிக்கும் நிகழ்வு: சவூதி நாட்டின் அரேபிய பிரமுகர்களும் பங்கேற்பு

0
230

(முஹம்மட் பயாஸ், எம்.ரி.எம்.யூனுஸ்)

WhatsApp-Image-20160513சிறீலங்கா ஹிறா பெளண்டேசனின் இலவச உம்றா திட்டத்தின் 3ம் கட்ட பயனத்தினை மேற்கொள்ள இருக்கின்ற யாத்திரியர்களுக்கான ஆவனங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (13) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மீழ்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் புணரமைப்பு இராஜாங்ஜ அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், சவுதி நாட்டின் முக்கிய அரேபிய பிரமுகர்கள், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் நகரமுதல்வர் எஸ்எச்.எம். அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் பென்களுக்கான வலுவூட்டல் நிலையத்தின் தலைவியுமான சல்மா அமீர் ஹம்சா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இச்சிறப்பு வாய்ந்த நிகழ்வில் புனித உம்றா பயனத்தினை மேற்கொள்பவர்களுக்கான ஆவணங்கள் மற்றும் ஏனைய பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அதிகளவானோரின் பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வினை தொடர்ந்து சவுதி நாட்டில் இருந்து வருகை தந்த அராபிய பிரதிநிதிகள் காத்தான்குடி பூர்வீக நூதனசாலையினை பார்வையிட்டனர்.

WhatsApp-Image-20160513 (1) WhatsApp-Image-20160513 (2) WhatsApp-Image-20160513 (3) WhatsApp-Image-20160513 (4) WhatsApp-Image-20160513 (5)

LEAVE A REPLY