பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உபகரணங்கள் தளவாடங்கள் விநியோகம்

0
319

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

DSC04436ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் இவ்வாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அலுவலக உபகரணங்கள், தளவாடங்கள் என்பவற்றை பிரதேசத்திலுள்ள சமூக அமைப்புக்களின் பயன்பாட்டுக்காக வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் அலுவலக உபகரணங்கள் மற்றும் தளவாடங்களைக் கையளித்தார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 62 சமூக அமைப்புக்களுக்கு சுமார் 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கணனி, படப்பிரதி இயந்திரம், அலுவலகத் தளவாடங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் வழங்கப்பட்டன.

ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ. சி. றமீஷா, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவலிங்கம், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், உட்பட அதிகாரிகளும் சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

DSC04439 DSC04444 DSC04496

LEAVE A REPLY