ஐ.சி.சி. கிரிக்கெட் குழு அங்கத்தவர்களாக மஹேல, ட்ராவிட் தெரிவு

0
123

mahela-jayawardene-and-rahul-dravidஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் ட்ராவிட் ஆகியோர் ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 3 வருட காலத்துக்கு இவர்கள் இக்குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்.

இக்குழுவின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே மீண்டும் 3 வருட காலத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நடுவர்களின் பிரதிநிதியாக ஸ்டீவ் டேவிஸுக்குப் பதிலாக ரிச்சர்ட் கெட்டில்பரோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ட்ராவிட்டும் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் டிம் மேவும் தற்போதைய வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துவற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

குமார் சங்கக்கார, எல். சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் நியமனக் காலம் முடிடைவடைந்ததையடுத்து அவர்களுக்குப் பதிலாக ட்ராவிட்டும் டிம் மேவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை முன்னாள் வீரர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மஹேல ஜயவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதுவரை மார்க் டெய்லர் இப்பதவியை வகித்தார்.

#MetroNews

LEAVE A REPLY