(Poem) தொழுகையும் துன்யாவும்

0
22

Muslim Salah(Mohamed Nizous)

இஷாவின் ஜமா அத்தில்
இரண்டு ஐன் கூடி விட்டால்
விஷா கொடுத்து ஹஸ்ரத்தை
வீட்டுக்கு அனுப்பச் சொல்வார்.

வெசாக்குப் பந்தலிலே
விடிய விடிய நின்றிருப்பார்,
இசைக்கும் நிகழச்சிக்கும்
இரவெல்லாம் விழித்திருப்பார்.

பகல் நேரத் தொழுகைக்கு
பாதி ஸப் நின்றிருக்க
இன்னுமொரு ஸப் தொடங்கி
இருப்பார் Fanக்காய்.

கிரிக்கட் விளையாட்டில்
நெருப்பான வெய்யிலிலும்
சிரிப்போடு நிற்பார்
செல்லார் வேறெங்கும்.

அதிகாலை இகாமத்து
அஞ்சு நிமிசம் பிந்தி விட்டால்
அதிரும் பள்ளிவாசல்
ஆளுக்காள் சத்தங்கள்
புதிதான படம் பார்க்க
போளினில் காத்திருக்க
எதுவுமே கூறாமல்
இன்பமாய் நின்றிருப்பார்.

அஸருக்கு ஹஸ்ரத்து
அஞ்சு ரகஅத் தொழுவித்தால்
பின்னால உள்ளோரும்
பேசாமல் தொழுது விட்டு
மெல்லக் கிசு கிசுத்து
மேலதிக ரகஅத்தை
கண்டித்துக் கதைப்பார்
தன் மறதி மறைப்பார்.

மாலை வேளையிலே
மக்ரிப் தொழுகையிலே
ஏதோ சில பல்ப்கள்
எரியாமல் இருட்டினால்
ஆளை ஆள் நோக்கி
அர்ச்சிப்பார் ட்ரஸ்டி போட்டை
தான் ஒரு பல்பை
தானாமாய்க் கொடார்
ஏனோ மற்றோர்க்கு
எப்போதும் குறை சொல்வார்.

உலகக் காரியத்தில்
உள்ள பொறுமையினை
அமல்களில் காட்டாது
ஆத்திரப் படுவோர்கள்
சிந்திக்க வேண்டுமென்றே
சில வரிகள் எழுதினேன்
நிந்திக்கும் நோக்கமல்ல
நேர் வழி கிடைக்கட்டும்.

LEAVE A REPLY