வஸீம் தாஜுதீன் கொலை: நாரஹேன்பிட்டி குற்றவியல் பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி நீதிமன்றத்தில் இரகசிய வாக்குமூலம் வழங்குவதற்கு முன்வந்தார்

0
269

Wasim Thajudeenபிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவின் முன்னாள் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரேரா, அந்த படு­கொலை குறித்து தான் அறிந்த அனைத்­தையும் இர­க­சிய வாக்கு மூல­மாக நீதி­வா­னுக்கு வழங்க முன்­வந்­துள்ளார். இதற்­கான விருப்­பத்தை அவர் சார்­பாக நேற்று மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரன தெரி­வித்தார்.

இத­னி­டையே வஸீம் தாஜு­தீனின் படு­கொ­லையை மூடி மறைத்து அதனை விபத்­தாக காட்ட பல உயர் பொலிஸ் அதி­கா­ரிகள் முயற்­சித்­துள்­ளமை இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ள­தா­கவும், அவர்கள் யாரின், எந்த குழுவின் தேவைக்­காக அப்­படி மறைத்­தனர்?, அதற்­கான காரணம் என்ன? அவர்­க­ளுக்கு அது தொடர்பில் உத்­த­ரவு வழங்­கி­யது யார்? போன்­ற­வற்றை வெளிப்­ப­டுத்­திக்­கொள்ள தற்­போது தீவிர விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு கொழும்பு மேல­திக நீதி­வ­ானுக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்­ளது.

அத்­துடன் சாட்­சி­யாக கண்­டு­பி­டிக்­கப்­பட்ட CCTV காட்­சி­களை கனடா, இங்­கி­லாந்து ஆய்வு கூடங்­க­ளுக்கு அனுப்­பு­வது குறித்த பேச்­சுக்கள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்ள நிலையில் 5 சி.சி.ரி.வி. காட்­சிகள் அடங்­கிய இறு­வட்­டுக்­களை விரைவில் ஆய்வு கூடங்­க­ளுக்கு அனுப்­ப­வுள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரிவு மன்­றுக்கு அறி­வித்­தது.

இந்­நி­லையில் வஸீம் தாஜு­தீனின் கொலையைத் தொடர்ந்து அவ­ரது சடலம் மீது முதல் பிரேத பரி­சோ­தனை செய்து சமர்­ப்பிக்­கப்­பட்ட அறிக்கை குறித்து இலங்கை மருத்­துவ சபை முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணையின் முடிவும் அடுத்த கட்ட விசா­ர­ணைக்கு மிக அவ­சி­ய­மா­னது எனவும் புல­னாய்வுப் பிரிவு நீதி­வா­னுக்கு அறி­வித்­துள்­ளது.

படு­கொலை செய்­யப்­பட்ட வஸீம் தாஜு­தீனின் மரணம் குறித்த விசா­ரணை நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே மேற்­படி விட­யங்கள் விசா­ர­ணை­யா­ளர்­க­ளான குற்றப் புல­னாய்வுப் பிரிவு மற்றும் சந்­தேக நபர்­களில் ஒரு­வ­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவின் சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரன ஆகி­யோரால் மன்­றுக்கு முன்­வைக்­கப்­பட்­டன.

#MetroNews

LEAVE A REPLY