சிப்லி பாறுக்கின் முயற்சியால் வவுணதீவு மக்களுக்கு குடி நீர் விநியோகம்

0
236

13223616_1735387833346497_1762960328_oமட்டக்களப்பு மாவட்டத்தின், வவுணதீவு பிரதேசத்தின் கன்னங்குடா, குருந்தியடி, காஞ்சிரங்குடா மற்றும் கொத்தியாபுலை ஆகிய பிரதேசங்களில் வறட்சி காரணமாக கிணறுகள் மற்றும் நீர் நிலைகளிலுள்ள நீர் வற்றியதனால் நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

இப்பிரதேசத்தில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு வருடமும் கோடை காலங்களில் இப்பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். இதற்காக வருடா வருடம் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வவுணதீவு பிரதேச சபையினால் தற்காலிகமாக குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் 500 லீற்றர் கொள்ளளவுள்ள தண்ணீர் தாங்கிகள் வைக்கப்பட்டு தண்ணீர் வவுசர்கள் மூலம் நீர் வழங்கப்படுகின்றது. இருப்பினும் இவ்வருடம் மிகவும் உஷ்ணமான காலநிலை காரணமாக மார்ச் மாதத்திலேயே நீர்த்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பே பல்வேறு ஊடகங்களிலும் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும் எந்தவொரு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ கவனமெடுக்காத நிலையில் கடந்த 07.05.2016ஆந்திகதி (சனிக்கிழமை) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் குறித்த பிரதேசங்களுக்கு நேரில் சென்று மக்களினுடைய அவலநிலையை கண்டறிந்தார்.

மேலும் வவுணதீவு பிரதேச சபை செயலாளரையும் குறித்த இடத்திற்கு வரவழைத்து மக்களின் நிலை பற்றி விளக்கமளித்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டார். இதன் போது மக்கள் தாம் நீருக்காக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக மாகாண சபை உறுப்பினரிடம் கண்ணீருடன் முறையிட்டனர்.

13230731_1735394596679154_1903357183_oமேலும் கடந்த 09.05.2016ஆந்திகதி (திங்கட்கிழமை) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக மனிதாபிமான உள்ளம் கொண்ட அரச சார்பற்ற தனி நபர்கள் மற்றும் சமூக சேவை உள்ளமுடைய உறுப்பினர்களை கொண்ட குழுவொன்றை நேரடியாக அழைத்துச் சென்று சுட்டிக்காட்டியதை அடுத்து நீர் வளமுள்ள இடங்கள் இரண்டு அடையாளங்காணப்பட்டு கிணறுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (12) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இருப்பினும் பிரதேச சபையூடாக நீர் வழங்கப்படாமை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மாவட்ட செயலாளரை தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறியதை அடுத்து 10.05.2016ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) மாவட்ட செயலாளரால் அனுப்பிவைக்கப்பட்ட விஷேட குழுவினரை நேரடியாக குறித்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று மக்களின் நிலை தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளரின் உத்தரவிற்கமைவாக வவுணதீவு பிரதேச சபையூடாக அடையாளங்காணப்பட்ட பல இடங்களில் 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் தாங்கிகளை வைத்து நீர் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டது. இதற்கமைய 11.05.2016ஆந்திகதி (புதன்கிழமை) முதற்கட்டமாக பத்து இடங்களில் நீர்த்தாங்கிகள் வைக்கப்பட்டு மக்களுக்கு நீர் வழங்கப்பட்டது. நேற்று வவுணதீவின் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இந்த நீர்வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

மேலும் வவுணதீவு பிரதேச சபைக்கு சொந்தமான நீர்த்தாங்கிகள் போதியளவு இன்மையால் காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி போன்ற பிரதேச சபைகளிலுள்ள நீர்தாங்கிகளை தற்காலிகமாக பயன்படுத்துவதற்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அவர்கள் பரிந்துரை வழங்கினார். இதன் போது குறித்த இடத்திற்கு வவுணதீவு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் ஊர்த்தலைவர், மாதர் சங்க தலைவர் உட்டபட பலரும் சமுகமளித்திருந்தனர்.

ஒரு மாதத்திற்கும் மேலாக தாம் எதிர்நோக்கிய இந்த நீர் பிரச்னைக்காண தீர்வினை பெற்றுக்கொடுக்க யாரும் முன்வராத நிலையில் நீர் வழங்கும் திட்டத்திற்கான முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு நீரைப் பெற்றுக்கொடுத்தமைக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்கு மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

13112688_1735394620012485_645417006_o 13199323_1735394676679146_944470595_o 13199507_1735394903345790_1806507957_o 13214798_1735387993346481_652957679_o 13214853_1735387873346493_1164162286_o

LEAVE A REPLY