ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகளே எமது வெற்றியாகும்: ஊழல் எதிரான சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி

0
126

Maithripalaஇலஞ்ச ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளே எமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் இலங்கையை முற்றாக ஊழல் அற்ற நாடாக உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில், லண்டன் நகரில் இடம்பெறகின்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இம் மாநாட்டில் கருத்து தெரிவித்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன்,ஊழல் ஒழிப்புத் திட்டத்தினை நாங்கள் 3 முறையில் முன்னெடுக்கவுள்ளோம்.

ஊழலில் ஈடுபடுபவர்களை இனங்காணுதல், அவர்களுக்கான தண்டனை தொடர்பில் ஆராய்தல், ஊழல் அற்ற அரசாங்கம்,வியாபாரம் மற்றும் விளையாட்டு துறையினை உருவாக்குல் என்பனவே எமது குறிக்கோள்களாகும்.

#Virakesari

LEAVE A REPLY