பல்லின கலாச்சாரம் பண்பாடுகள் இணைவதன் மூலம்தான் நிரந்தர சமாதானத்தின் சுவாசக்காற்றை நாடு அனுபவிக்க முடியும்

0
353

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Ali Zahir Moulana“இந்த நாட்டில் வாழும் பல்லின மக்களின் கலாச்சாரம் பண்பாடுகள் இணைவதன் மூலம்தான் நிரந்தர சமாதானத்தின் சுவாசக்காற்றை நாடு அனுபவிக்க முடியும்” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் சுமார் ஒரு கோடி 62 இலட்ச ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்ட கேட்போர் கூடம் வியாழக்கிழமை 12.05.2016 திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றனார்.

அலிகார் தேசியக் கல்லூரியின் அதிபர் எஸ்.ஏ. நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அவர்,

“சுமார் 750 இருக்கைகளுடனான இந்த மண்டபத்திற்கு தேவையான அத்தனை வசதிகளையும் பெற்றுக் கொடுக்க தான் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும்; கூறினார்.

மேலும் அலிகார் தேசியக் கல்லூரியின் தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தும் முகமாக கணினிகளுடன், மல்டி மீடியா புரஜெக்டர் உட்பட ஏனைய தளவாட வசதிகளையும் விரைவில் பெற்றுக் கொடுக்க ஆவன செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடு சமாதானத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நல்ல வேளையில் நாட்டு மக்கள் தங்களுடைய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களோடு இணைந்து நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும்.

DSC04383பேதம் காட்டி பிரித்து சதி செய்து இன்னமும் இந்த நாட்டை சீரழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்கக் கூடாது.

பாமர மக்கள் தொடக்கம் படித்தவர் வரை அனைவரும் சமாதானமாக சௌஜன்யமாக வாழ்வதற்கு அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளும் வழி சமைக்க வேண்டும்” என்றார்.

அலிகார் தேசியக் கல்லூரியின் அதிபர் எஸ்.ஏ. நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மத் ஹனீபா, மட்டக்களப்பு மத்தி வலய கல்வி அதிகாரிகள், ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் ஏ.சி.எம். ஷயீட், கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் செய்னுலாப்தீன் ஹிதாயத்துல்லாஹ். இணைப்பாளர் ஏ. அப்துல் நாஸர் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

DSC04410

LEAVE A REPLY