பொத்துவிலிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பஸ் விபத்து: சாரதி பலி

0
144

(எம்.எஸ்.சம்சுல் ஹுதா)

0d73ebee-b5fc-44c5-b0f3-798e1253791cபொத்துவிலிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று எம்பிலிபிட்டிய பகுதியில் எதிரே வந்த கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த பயணிகள் பலத்த காயங்களுடன் ஹகவத்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சாரதி ஸ்தலத்திலே பலியாகியுள்ளார், மேலும் ஐவர் அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து ஒன்றுக்கொன்று முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலே இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் கருத்து தெரிவித்தார். மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY