அங்கோலாவில் பரவும் மஞ்சள் காய்ச்சலால் உலகளாவிய சுகாதார அவசரகால நிலைமை.!

0
159

324213_46889738அங்­கோ­லாவில் பரவிவரும் மஞ்சள் காய்ச்­ச­லா­னது உல­க­ளா­விய சுகா­தார அவ­ச­ர­கால நிலை­மையைத் தோற்­று­விப்­ப­தாக உள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­வித்­தது.

நுளம்­பு­களால் பரவும் மேற்­படி காய்ச்சல் கார­ண­மாக அங்­கோ­லாவில் கடந்த வரு டம் டிசம்பர் மாதம் முதல் 277 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக அந்த ஸ்தாபனம் கூறு­கி­றது.

இந்­நி­லையில் இந்தக் காய்ச்­ச­லுக்­கான தடுப்பு மருந்­துகள் தொடர்பில் நிலவும் பற்­றாக்­கு­றை­யா­னது அந்தக் காய்ச்சல் ஏனைய நாடு­க­ளுக்கும் பரவும் அபாய நிலையைத் தோற்­று­வித்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு ­கி­றது.

இது­வரை அங்­கோ­லாவின் 24.3 மில்­லியன் சனத்­தொ­கையில் சுமார் 6 மில்­லியன் பேருக்கு இந்தத் தடுப்பு மருந்து வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே இந்த வைர­ஸா­னது கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா மற்றும் சீனாவுக்கும் பரவியுள்ளது.

LEAVE A REPLY