இலவச உம்றா : 3ஆவது குழு 19 ஆம் திகதி சவூதி பயணம்

0
6

வெள்ளியன்று ஆவணங்கள் கையளிப்பு

8f679947-f11a-493d-9e21-a3a4cb80aaafநாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவச உம்றா வேலைத்திட்டத்தின் மூன்றாவது குழு எதிர்வரும் 19 ஆம் திகதி புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளது. இக் குழுவில் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான பயணக் கொடுப்பணவு மற்றும் ஆவணங்கள் நாளை வெள்ளிக்கிழமை ஹிரா பௌண்டேஷன் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

உம்றா அல்லது ஹஜ் கடமைகளை இதுவரைக்காலமும் நிறைவேற்றாத 500 இமாம்கள் மற்றும் கதீப்மார்களுக்கான இலவசமாக உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் அனுசரனை வழங்கியுள்ளது.

அதற்கமைய நாடாளவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 100 பேர் கொண்ட முதல் குழு கடந்த மாதம் தங்களது கடமையை நிறைவேற்றி நாடு திரும்பியிருந்தது. இரண்டாவது குழு தற்போது உம்றா கடமைகளை செய்து வருகின்றது. இந்நிலையில், மேலும் 100 பேர் கொண்ட மூன்றாவது குழு எதிர்வரும் 19 ஆம் திகதி புனித மக்கா நகர் நோக்கி புறப்படவுள்ளது.

இந்த உம்றா குழுவில் உள்ளவர்களுக்கான பயணக் கொடுப்பணவு மற்றும் ஆவணங்கள் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹிரா பௌண்டேஷன் தலைவர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

LEAVE A REPLY