சுற்றுலா சேவை வழங்குனர்களுக்கான மூன்றுநாள் விழிப்புணர்வு பயிற்சி நெறி

0
255

(வாழைச்சேனை நிருபர்)

1பாசிக்குடாவில் சுற்றுலாத் துறையினை விருத்தி செய்யும் முகமாக சுற்றுலா சேவை வழங்குனர்களுக்கான மூன்றுநாள் விழிப்புணர்வு பயிற்சி நெறி இன்று (12) வியாழக்கிழமை பாசிக்குடா அமெதீஸ் வீச் சுற்றுலா விடுதியில் ஆரம்பமானது.

இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் இந் நிகழ்வு ஏற்பாடு செ;யப்பட்டுள்ளது. இப்பயிற்சிக் கருத்தரங்கானது இன்று தொடக்கம் 14.05.2016 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

இதில் சுற்றுலா அபிவிருத்தி சம்பந்தமான நியமங்கள், விதிமுறைகள், கோட்பாடுகள், சுற்றுலா விடுதி நடத்துவதற்கான ஆகக் குறைந்த தரம் பின்பற்றுதல், தங்களது வியாபார ஸ்தாபனத்தினை பதிவு செய்து கொள்ளுதல், சுற்றுலா விடுதிக்கான அனுமதியினை பெற்றுக் கொள்ளுதல், அதனை புதுப்பித்துக் கொள்ளுதல் போன்றவற்றுக்கான பயிற்சி நடைமுறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.

தொடர்ந்து மூன்று நாள் அமர்வில் பங்குபற்றும் சுற்றுலா சேவை வழங்குனர்களுக்கு சுற்றுலா வழிகாட்டலுக்கான இலங்கை சுற்றுலா அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையும் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் சர்வதேச நிதியக் கூட்டுத்தாபனத்திற்கான சிரேஷ்ட திட்டப்பணிப்பாளர் கிரஹம் ஹாரிஸ், சர்வதேச நிதியத்துக்கான அபிவிருத்தித்திட்ட அதிகாரி காஞ்சனா கயனி அபயவிக்ரம, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சந்தன விஜயரத்ன, உதவிப் பணிப்பாளர் பாலித்த கென்நாயக்க மற்றும் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் பாசிக்குடாவிற்கான சுற்றுலா விடுதி உத்தியோகஸ்தர் எம்.எம்.மாஹிர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

2 5 9

LEAVE A REPLY