பனாமா ஆவணங்களில் 65 இலங்கையர்கள்

0
174

சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லாளர் அமைப்­பினால் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட பனாமா ஆவ­ணங்­களில் 65 இலங்­கை­யர்­களின் பெயர்களும் உள்ளடங்கியுள்­ளன. உலகளாவிய ரீதியில் 3 இலட்­சத்து 68 ஆயிரம் பேரின் பெயர்கள் இந்த ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள நிலை­யி­லேயே இலங்­கை­யர்­களின் 65 பெயர்­களும் உள்ளடங்கியுள்­ளன.

இந்த 65 இலங்­கை­யர்­களில் 53 தனி நபர்­களும் 3 நிறு­வ­னங்­களும் 7 இடை­நிலை முகவர் நிறு­வனங்களுடன் தொடர்­பா­ன­வர்­களும் அடங்குகின்றனர்.

விசே­ட­மாக கடந்த காலங்­களில் பாரிய சர்ச்­சையை ஏற்­ப­டுத்­திய எவன்ட் கார்ட் நிறு­வ­னத்தின் தலை­வர் நிஸங்க சேனாதிபதியின் பெயரும் அந்­நி­று­வ­னத்தின் நான்கு பங்­கு­தா­ரர்­களின் பெயர்­களும் நேற்று முன்­தினம் வெளி­யி­டப்­பட்ட பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­நி­லையில் பனாமா ஆவ­ணங்­களில் வெளி­யா­கி­யுள்ள 65 இலங்­கை­யர்கள் தொடர்­பாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் பனாமா ஆவ­ணங்கள் கசி­ய­வி­டப்­பட்ட நிலையில் உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில் இந்த ஆவ­ணங்களை வெளி­யி­டு­வ­தாக சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லாளர் அமைப்பு கூறி­யி­ருந்­தது. அந்த வகை­யி­லேயே தற்­போது உத்­தி­யோ­க­பூர்­வ­மான முறையில் இந்த ஆவ­ணங்கள் கசி­ய­வி­டப்­பட்­டுள்­ளன.

அர­சாங்கம்
இந்­நி­லையில் பனாமா ஆவ­ணங்­களில் இடம்­பெற்­றுள்ள இலங்­கை­யர்கள் தொடர்­பாக அர­சாங்கம் எவ்­வா­றான நட­வ­டிக்­கையை எடுக்கும் என்­பது தொடர்பில் அமைச்சர் டிலான் பெரேரா கொழும்பில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் விளக்­க­ம­ளிக்­கையில் வரி ஏய்ப்பு செய்து இர­க­சி­ய­மாக வங்­கி­களில் பணத்தை பதுக்கி வைத்­துள்­ள­வர்கள் தொடர்­பி­லான விப­ரங்கள் அடங்­கிய பனாமா நாட்டு சட்ட நிறு­வ­ன­மான மொசாக் பொன்­சேகா நிறு­வ­னத்தின் 11.5 மில்­லியன் இர­க­சிய தக­வல்கள் பனாமா ஆவ­ணங்கள் என்ற பெயரில் கடந்த காலத்­தில்­வெ­ளி­யி­டப்­பட்­டி­ருந்­தன.

இந்த அறிக்­கையில் 35 நாடு­களைச் சேர்ந்த முக்­கிய வங்­கி­களின் முக்­கிய தொடர்­புகள் மற்றும் நபர்­களின் பட்­டியல், அத்­தோடு 128 அர­சி­யல்­வா­திகள் தொடர்­பு­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் இலங்­கை­யுடன் தொடர்­பு­டைய அல்­லது இலங்­கை­யர்கள் உள்­ளனர் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எனினும் இப்­போது இலங்­கையில் நபர்­களின் பெயர்­க­ளையும் உள்­ள­டக்­கிய அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளனர்.

இலங்­கையை சேர்ந்த 65 நபர்­களின் பெயர்­க­ளுடன் இந்த பனாமா அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள நிலையில் இந்த நபர்கள் தொடர்­பிலும் இந்த நபர்­களின் பின்­னணி, எந்த நிறு­வ­னங்கள் தொடர்­பு­களில் உள்­ளது என்­பன தொடர்­பிலும் அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும்.

அதேபோல் இந்த 65 பேர்­களில் முக்­கி­ய­மான நபர்கள் சிலரின் பெயர்­களும் உள்­ளன. ஆகவே அவர்கள் தொடர்­பிலும் அர­சாங்கம் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும்.

இவை சாதா­ராண விடயம் அல்ல. நிதி மோச­டிகள், பணப் பதுக்கல் தொடர்­பு­டைய விட­யங்­களில் சர்­வ­தேச தரப்பு சுமத்­தி­யுள்ள குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­காது காலத்தை கடத்­தினால் அவை இறு­தியில் நாட்­டிற்கும் அர­சுக்­குமே அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தும் என்றார்.

ஊழ­லுக்கு எதி­ரான அமைப்பு
இதே­வேளை இது தொடர்பில் ஊழ­லுக்கு எதி­ரான அமைப்பின் ஆலோ­சகர் ரஞ்ஜித் கீர்த்தி தென்­னக்கோன் தெரி­விக்­கையில். , “ இலங்­கை­யி­லி­ருந்து அண்­மைய வரு­டங்­களில் பில்­லி­யன்­க­ணக்­கான பணம் வெளியில் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளது.

அந்தப் பணத்தை திரும்பப் பெற மத்­திய வங்கி நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும். நிதி குற்­றச்­செ­யல்கள் தொடர்பில் பொறி­மு­றை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்த வேண்­டி­யதன் தேவைப்­பாட்டை மீளவும் ஞாப­கப்­ப­டுத்­து­வதை மட்­டுமே பனாமா பேப்பர்ஸ் செய்­துள்­ளது” “எவான்ட் கார்ட் இத்­த­கைய சர்ச்­சைக்குள் சிக்கிக் கொள்­வதும் இது முதல் தட­வை­யல்ல.

மேற்­படி சர்ச்­சைக்­கு­ரிய செயற்­பாடு தொடர்­பான விசா­ர­ணைகள் இன்னும் பூர்த்தி செய்­யப்­ப­டா­துள்­ளது” எனினும் நாம் நிதி விசா­ர­ணை­களின் நிலை குறித்து மகிழ்ச்­சி­ய­டைய முடி­யா­துள்­ளது என்று தெரி­வித்தார்.

இது இவ்­வா­றி­ருக்க உல­கி­லுள்ள செல்­வந்­தர்­களும் பனாமா நாட்டில் செயற்­படும் சட்ட நிறு­வ­ன­மான மொஸாக் பொன்­ஸே­காவைப் பயன்­ப­டுத்தி எவ்­வாறு சொத்­து­களை மறைத்து வைத்­தார்கள் என்­பது தொடர்பில் 200,000 நிறு­வ­னங்­களின் தர­வு­களை சர்­வ­தேச புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்கள் அமைப்பு இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்­ளது.

மேற்­படி பிந்­திய ஆவ­ணங்கள் ஹொங்கொங், அமெ­ரிக்க மாநி­ல­மான நெவாடா உள்­ள­டங்­க­லாக அதி­கார எல்­லை­களில் ஸ்தாபிக்­கப்­பட்ட ் பயன்படுத்தி எவ்வாறு சொத்துகளை மறைத்து வைத்தார்கள் என்பது தொடர்பில் 200,000 நிறுவனங்களின் தரவுகளை சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் அமைப்பு இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

ஆனால் இது பனாமா பேப்பர்ஸ் என அறியப்படும் . சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் அமைப்பு மிகவும் கவனமாக பொதுமக்களின் அக்கறைகளுக்கு ஏற்ப தகவல்களை வடிகட்டி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

-Vidivelli-

LEAVE A REPLY