க.பொ.த. சா/தரத்தில் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களையும் கௌரவிக்கும் வைபவம்

0
156

(M.T. ஹைதர் அலி)

திருமலை மாவட்டத்தின், புல்மோட்டை கல்வி அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களையும் மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புல்மோட்டை மிதிவயல் திறந்த வெளி அரங்கில் 10.05.2016ஆம் திகதி நடைபெற்றது.

புல்மோட்டை பிரதேசத்தில் முதல் தடவையாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் அதி திறமை சித்தியான 9A மற்றும் இதர சித்திகளை பெற்ற மாணவர்களையும் மற்றும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து கணிதம், விஞ்ஞானம் மற்றும் கலை ஆகிய துறைகளில் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்களையும் நினைவுச்சின்னம், பரிசில்கள் மற்றும் சான்றிதள்களும் வழங்கி கௌரவிக்கபட்டனர்.

இந்நிகழ்வுக்கு கௌரவ விருந்தினராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் திரு. சிராஜ் மசூர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உப தவிசாளர் ஏ.பி. தௌபீக், முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான சல்மான் பாரிஸ், பத்ருதீன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் அரச அலுவலகர்கள் மற்றும் பிரதேச புத்திஜீவிகள் உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

46fe06e5-1372-4cc3-a4f2-16ecffd45f3d

4359cccf-3054-4121-b07b-c166f16f0e65

f307f99c-de06-4522-a58b-1dca9216ddee

LEAVE A REPLY