ஊடக சுதந்திரத்தில் இலங்கைக்கு 141ஆம் இடம்

0
95

Gayantha-Karunatilekaகடந்த ஆண்டு ஊடக சுதந்திரம் மிக்க நாடுகளில் 162ஆம் இடத்திலிருந்த இலங்கை இவ்வாண்டு 141ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நல்லாட்சியினூடாக ஊடகத்திற்கு வழங்கிய சுதந்திரமே இதற்கு பிரதான காரணம் என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்றபோதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 180 நாடுகளில் 162வது இடத்தை பெற்றுகொண்ட இலங்கை இம்முறை 141வது இடத்தை எட்டியுள்ளது. நல்லாட்சியில் ஊடகங்கள் சுதந்திரமாக தமது சேவையை செய்வதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது அதனால்தான் இம்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவே தற்போதைய அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY