சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? பர்கர்கள், ஃப்ரைகள் வகை உணவுகளை தவிர்க்கவும்: ஆய்வில் எச்சரிக்கை

0
176

junk_2848771fஇன்று பெரும்பாலும் ‘ஜங்க் ஃபுட்’ என்று அழைக்கப்படும் பர்கர்கள், ஃப்ரைகள், பிஸ்கட்டுகள், சாக்லேட் பார்கல், சீஸ், கேஸ் அதிகமுள்ள பானங்கள் ஆகியவற்றினால் சிறுநீரகம் பழுதடைகிறது என்று பிரிட்டன் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது பிரிட்டனின் ஆங்லியா ரஸ்கின் பல்கலைக் கழக ஆய்வில் கூறியிருப்பதாவது:

டைப் 2 நீரிழிவு நோய் அளவுக்கதிகமான உடற்பருமன் நோய்க்குக் காரணமாக கருதப்படுகிறது. உடற்பருமன் நோய் உலக அளவில் அபாயகரமாக அதிகரித்து வருகிறது. டைப் 2 நீரிழிவு நோய் இருந்தால் உடல் தேவையான இன்சுலினை உற்பத்தி செய்யாது அல்லது இன்சுலினுக்கு நீரிழிவு வினையாற்றாமல் இருந்து விடும் ஆபத்து உள்ளது.

இதனால்தான் ரத்தத்தில் குளூக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இதுதான் சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படைய நீண்ட நாள் காரணமாக அமைந்து விடுகிறது. இதனால் நீரிழிவு கிட்னி நோய்கள் ஏற்படுகிறது.

எனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கிட்னி உள்வாங்குவதைத் தடுப்பதே இதற்கு சரியான மருத்துவத் தீர்வாக அமையும். இந்த ஆய்வுக்காக எலிகளுக்கு சீஸ், சாக்கலேட் பார்கள், பிஸ்கட்டுகள், மார்ஷ்மெலோக்கள் ஆகியவற்றை 8 வாரங்களுக்கு கொடுத்து வரப்பட்டது.

இதன் பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் இதன் விளைவுகள் மற்றும் கிட்னிகளில் சர்க்கரையை கொண்டு செல்லும் பல்வேறு விதங்களும் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் டைப் 2 நீரிழிவு உள்ள எலிகளில் சில குறிப்பிட்ட வகை குளூக்கோஸ் இடமாற்றிகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த ஆய்வின் மூலம் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் கிட்னியில் குளூக்கோஸ் இடமாற்றிகளில் மாற்றங்கள் ஏற்பட காரணமாகிறது. அதே நேரத்தில் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் அல்லது ஜங்க் ஃபுட்கள் கிட்னியில் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுத்தும் அதே விளைவுகளை தோற்றுவிக்கிறது.

டைப் 1 நீரிழிவு நோயில் உடல் இன்சுலினை உற்பத்தி செய்யாது. ஆனால் டைப் 2 நீரிழிவு நோயில் உற்பத்தியாகும் இன்சுலினை உடல் சரியாக பயன்படுத்த முடியாது போய்விடும். இது இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் நீரிழிவு ஆகும். முதலில் கணையம் கூடுதல் இன்சுலினை உற்பத்தி செய்து இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முயலும் பிறகு நாளாக நாளாக கணையத்தாலும் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலை தோன்றும்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் எக்ஸ்பரிமெண்டல் பிசியாலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY