(Poem) குசினுக்குள் குளோபல் விலேஜ்

0
12

(Mohamed Nizous)

பக்கத்து ஏரியாவின்
பரபரப்பு செய்திகளை
மிக்கத் தெளிவாவும்
மிக விரைவாய் சொல்லுவது
சிக்கலான சேவை செய்யும்
CNN சேவையல்ல
அக்காவும் அம்மணியும்
அடுப்படியில் உட்கார்ந்தே
எக்கணமும் ஊர் செய்தி
இடைவிடாது பேசிடுவார்

தேடுகின்ற எல்லாம் தேடிக் காணாவிடின்
நாடிச் செல்வார் நல்ல பதில் கிடைக்கும்
பாடியதில் பதிந்த பொருள்
பயன் படுத்தும் கூகிள் அல்ல
ஓடி ஒழிந்து கிடக்கும்
ஊத்த சொக்ஸும் ஊசிகளும்
வீடுகளை ஆளும் பெண்
விரைவாகத் தேடித் தருவாள்

செயார் செய்ய லைக் செய்தல்
சில நேரம் கொமண்ட் செய்தல்
இயம்பியது இவ்விடத்தில்
இலக்ட்ரோனில் முகனூலல்ல
புயலாக மாறி நின்று
பொருந்தாவற்றை டிஸ்லைக் செய்யும்
பயபுள்ள யாரென்றால்
பலர் நடுங்கும் மனைவிதான்

ஆக்கும் முறைகள்
அடுப்படிக் கலைகள்
மூக்கால அழுது
முடிக்கும் காரியங்கள்
நோக்க வேண்டுமாயின்
நோண்ட வேண்டாம் விக்கி பீடியா
சீக்கிரமாய் அறிந்து கொள்ள
செல்லுங்கள் குசினுக்குள்
ஜோக்குக்காய் எழுதியது
சொந்த அனுபவம் அல்ல

LEAVE A REPLY