சட்ட விரோத வர்ண மீன்பிடித்தொழில் உபகரணங்கள் மீட்பு-கைப்பற்றப்பட்ட பொருட்களை நீதிமண்றில் ஆஜர்படுத்த உத்தரவு

0
223

(முஹம்மட் பயாஸ்)

WhatsApp-Image-20160511 (1)காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி அற்ற மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி வர்ண மீன் பிடிப்பில் ஈடுபடுத்தப்பட்ட உபகாரனங்கள் சிலவற்றை இலங்கை கடற்படையின் உதவியுடன் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருடகள் நீதிமண்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கடற்தொழில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது சட்ட விரோதமான முறையில் வர்ண மீன்களை பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் சட்டவிரோத உபகரணங்களான, துப்பாக்கி, தங்கூசிப் பக்கட்டுகள், அளவுக்கதிகமான சிலின்டர்கள், மீன்களை குத்தி பிடிக்கப்பயன்படும் ஈட்டி என்பவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கடற்றொழில் திணைகளத்திற்கு கொண்டு சென்று நீதி மண்றில் ஆஜர்படுத்த உள்ளனர்.

எனவே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

WhatsApp-Image-20160511 (3) WhatsApp-Image-20160511 (5) WhatsApp-Image-20160511

LEAVE A REPLY