இந்தியாவில் 72 வயதில் பிள்ளைப் பெற்றார் பாட்டி ஒருவர்

0
158
கணவர் மற்றும் மகனுடன் தல்ஜிந்தர் கவுர்
கணவர் மற்றும் மகனுடன் தல்ஜிந்தர் கவுர்

இந்தியாவில் 72 வயதான பெண்மணி ஒருவர் தனது முதல் குழந்தையை செயற்கை கருவூட்டல் மூலம் பெற்றெடுத்துள்ளார் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.

வட இந்திய மாநிலமான ஹரியானாவிலுள்ள அந்த மருத்துவமனையில் 79 வயதான தனது கணவருடன் இணைந்து இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்ற தல்ஜிந்தர் கவுருக்கு கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

தங்களுக்கு திருமணம் ஆகி 46 ஆண்டுகள் ஆவதாகவும், தமக்கு பிள்ளை பிறக்காது எனும் நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்த நிலையில், தமது பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளன என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இவ்வகையில் ஒருவர் பிள்ளை பெறுவது இந்தியாவில் முதல் முறை இல்லை.

கடந்த 2008ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் 70 வயதைக் கடந்த ஒரு பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.

#BBC

LEAVE A REPLY