காத்தான்குடியில் வீதி விபத்துக்கு காரனமான பூச்சாடிகள் அகற்றப்பட்டன

0
225

(M.T. ஹைதர் அலி)

DSC_6262காத்தான்குடியில் அன்மைக் காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வந்தமை யாவரும் அறிந்த ஓரு விடயமாகும். இவ் வீதி விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து இதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக்கின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த மாதம் 2016.04.19ஆந்திகதி (செவ்வாய்கிழமை) காத்தான்குடி பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இக்கூட்டத்தில் காத்தான்குடி பிரதான வீதியில் காணப்படுகின்ற பூச்சாடிகளை அகற்றுவதன் மூலமே இவ்வீதி விபத்துக்களைத் தடுக்க முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் கூறியதை ஆராய்ந்த பொலீசார் வீதி விபத்துக்களுக்கான காரணம் வீதியின் நடுவே காணப்படும் பூச்சாடிகளே எனவும் வீதி விபத்துக்களை பூச்சாடிகளை அகற்றுவதன் மூலமே தடுக்க முடியும் எனவும் அறிக்கை சமர்ப்பித்து இருந்தனர்.

இருப்பினும் மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும் இராஜங்க அமைச்சரும் இவ்வபிவிருத்தியை மேற்கொண்டவருமான ஹிஸ்புல்லாஹ்வின் அனுமதியின்றி இப்பூச்சாடிகளை அகற்ற முடியாது என்கின்ற நிலை காணப்பட்டது.

இருப்பினும் வீதி விபத்துக்களைத் தவிர்க்க வேண்டுமெனில் இப்பூச்சாடிகளை அகற்றியே ஆக வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் அவர்களும் காத்தான்குடிப் போலீசாரும் சமூக நலன் கருதி எவ்வித விட்டுக்கொடுப்புக்களையும் மேற்கொள்ளாமல் இருந்ததற்கமைவாக இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அனுமதி கிடைக்கப்பெற்று இன்று (11) புதன்னிழமை காத்தான்குடியில் குறிப்பிட்ட இடங்களில் மக்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு காரணமாக இருந்த பூச்சாடிகள் அகற்றப்பட்டன.

DSC_6232 DSC_6233 DSC_6238 DSC_6240 DSC_6242 DSC_6249 DSC_6255 DSC_6256 DSC_6259

LEAVE A REPLY