‘தேர்தல்முறை மறுசீரமைப்பு’ சம்பந்தமான செயலமர்வு

0
192

(பி. முஹாஜிரீன்)

SLM. Faleel‘இந்நாட்டில் வாழும் எல்லா சிறுபான்மை மக்களினதும் பிரதிநிதித்துவம், அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய வகையிலான பொருத்தமான காப்பீடுகள் தேர்தல்முறை மறுசீரமைப்பில் உள்வாங்கப்படல் வேண்டும். எல்லா அசாதாரண, முரண்பாடான சூழல்களிலும் மக்களின் ஜனநாயக அடிப்படைகளும் அவர்களின் இறையாண்மை கொண்ட பிரதிநிதித்துவங்களும் பாதுகாக்கப்படல் வேண்டும்’ என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்வி கலாசார செயலாளரும், உயர்பீட உறுப்பினருமான எஸ்.எல்.எம்.பழீல் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (03) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ‘தேர்தல்முறை மறுசீரமைப்பு’ சம்பந்தமான செயலமர்வின்போது, பிரதான வளவாளராக கலந்துகொண்ட நோர்வே நாட்டைச் சேர்ந்த காரே வொல்லன்னிடம் ‘240 பேர் கொண்ட உத்தேச பாராளுமன்ற பிரதிநிதித்துவ முறைமையில் இலங்கை முஸ்லிம்களின் 10வீத சனத்தொகைக்கான 24 முன்மொழிவில் என்ற பிரதிதித்துவ இலக்கு அடையப்பெறுமா? அவர்களின் இந்த எதிர்பார்ப்பு இலக்கு பாதுகாக்கப்படுமா? என்ற கேள்வியினை முன்வைத்து கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்களும் துறைசார் புத்திஜீவிகளும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவ தேர்தல் முறைமையினை வகுப்பதில் சர்வதேச அனுபவம் கொண்ட காரே வொல்லன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

நடைமுறையிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் 2015;ம் ஆண்டு தேர்தல் முடிவுகளில், அரசியல் கட்சிகளின்; நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தனது உத்தேச கலப்பு முறையினை அவர் முன்வைத்தார்.

உத்தேச 60 : 40 என்ற விகிதாசாரத்தில் தொகுதி முறையும் தற்போதைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையும் ஒன்றிணைந்த கலப்பு முறையிலான முன்மொழிவினை அவர் விளக்கினார். இதனடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தொகுதிவாரியாக 144 பேரும் விகிதாசார முறையில் 96 பேருமாக மொத்தம் 240 பேர் தெரிவு செய்யப்படுவர் என்று கூறினார்.

தற்போதைய விகிதாசார முறையிலுள்ள தேவையற்ற கட்சிகளின் உள்ளக போட்டிகளைத் தவிர்த்து, பொறுப்புக்கூறும் தன்மையினை அதிகரித்து சிறுபான்மை கட்சிகளையும் பாதிக்காத முறையில் இரட்டை வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தி பிரதிநிதித்துவ சமநிலையை இதன்மூலம் பேணலாம் என திரு. காரே வொல்லன் விளக்கினார்.

இங்கு தனது சந்தேகத்திற்கான நியாயங்களை விளக்கிய ஜனாப் பழீல் தொடர்ந்தும் கருத்துக் கூறுகையில்,

இவ்வாறான அசாதாரண சூழலில் ஜனநாயக இயந்திரம் செயலற்றுப்போன, வாக்காளரின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை நாம் எடுத்துக்கூறலாம். தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட உள்நாட்டு வெளிநாட்டு முகவர்கள் தமது அவதானிப்பு அறிக்கைகளை கையளித்த போதிலும் அவை கடந்த ஆட்சியாளரினால் புறக்கணிக்கப்பட்டன.

2005ல் இந்நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது முக்கியமாக இரண்டு பிரதான கட்சிகளின் இரு வேட்பாளர்கள் போட்டியில் நின்றனர். ஆனால் தேர்தலுக்கு முதல் நாளிரவு வடகிழக்கில் ஆதிக்கத்தைக் கொண்டிருந்த ஆயுதக் குழுவினர் விடுத்த ஒரு அச்சுறுத்தலைத் தொடர்ந்து வடகிழக்கின் தமிழ் மக்கள் இரவோடிரவாக தமது வாக்களிக்கும் அடிப்படை உரிமையைப் பறி கொடுத்தனர்.

இந்த முரண்பாடான, அசாதாரண சூழ்நிலை முழு தேர்தல் கள நிலவரத்தையும் மாற்றி, அடுத்த விடிகின்றபோது அச்சுறுத்தல் காரணமாக தமது வாக்களிக்கும் உரிமையை முற்றாக பறிகொடுத்து வடகிழக்கு தமிழ்மக்கள் வாக்களிக்கும் நடைமுறையிலிருந்தும் விலகிநின்றனர்.

இதனால் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருக்குச் சார்பாகவிருந்த தேர்தல் களநிலவரம் மாற்றப்பட்டு பொதுசன ஐக்கிய முன்னணி வேட்பாளர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இவ்வேளையில் முழு ஜனநாயக விழுமியங்களும், அடிப்படைகளும் முடங்கிப்போன நிலைமையின நாம் அவதானித்தோம். இங்கு வடகிழக்கு சிறுபான்மை மக்களின் விருப்பத்தெரிவுக்கு, அவர்களின் ஆணைக்கு மாற்றமாக ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார்.

இவ்வாறான அசாதாரண சூழல்களில் சிறுபாண்மை மக்களின் பிரதிநிதித்துவங்கள் குறைவடையாது பாதுகாத்து உறுதிப்படுத்தக்கூடிய பாதுகாப்பு காப்பீட்டு அரண்கள் புதிய உத்தேச கலப்பு பிரதிநிதித்துவ முறையில் உள்ளடக்கப்படல் வேண்டும் என்பதை ஜனாப் பழீல் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY