சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்க மறியல் மீண்டும் நீடிப்பு!

0
16

(விஷேட நிருபர்)

sivanesathurai_chandrakanthan_pillaiyanதமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 25ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி முகைதீன் முன்னிலையில் இன்று (11) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி முகைதீன் உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்இ தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜாஇ கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY