மண்முனை வடக்கு, வவுனத்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை

0
247

99daa844-f8bf-4158-8841-9529bb56af13மட்டக்களப்பு, மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு, வவுனத்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்கள் மட்டு. மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

மண்முனை மேற்கு, வவுனத்தீவு பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவர்களுமான அலி சாஹிர் மௌலானா மற்றும் சிறிநேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன், மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன், மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் நாளை வியாழக்கிழமை பி.ப. 2.30 மணிக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விலும் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹிர் மௌலானா மற்றும் சிறிநேசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

“இவ்விரு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டங்களின் போது மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீடு, மாகாண அமைச்சுத் திட்டங்களுக்களுக் அங்கீகாரம் என்பன இதன் போது வழங்கப்படவுள்ளது.” என இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் தெரிவித்தார்.

LEAVE A REPLY