(Poem) உம்பா என்றழைக்காத மாடில்லையே

0
32

(Mohamed Nizous)

உம்பாவை நாம் உண்ணல் பர்ளில்லையே!
உம்பாவை உண்ணாத ஆளில்லையே!
ஊரில் எங்கும் சேரும் பங்ஷன்
மாடன்றி வேறுணவு ஏது?

புரியாணி பாலாண்டி பொரிக்கின்ற ரோஸ் இறைச்சி
இருக்கின்ற முழுவதிலும் இருக்கும் இது.
விலை மீது விலை கூட்டி விற்றாலும் தடுத்தாலும் கடை முன்னே கடுங் கூட்டம் நிற்கும் பாரு.
யாரிங்கு தடுத்தாலும் கணக்கில்லை எமக்கிங்கு
அது வேண்டும் இல்லாட்டி போராடுவோம்
முள்ளோடு சதை வாங்கி புளியாணம் தனை வைத்து
உண்கின்ற ருசிக்காக ஏக்கம் கொள்வோம்
-அதை நீயே தடுக்காதே

நெய்த்தோலி கருவாடு நோயில்லாச் சாப்பாடு
அவை யாவும் இறைச்சிக்கு ஈடாகுமா?
கிழங்கோடு பொரிச்சறச்சி புளி ஊத்தி தினம் வாங்கி
கலங்கின்ற கண்ணோடு தின்பாரம்மா.
ஆராய்ந்து பார்த்தாலும் அதிலுள்ள நோய் நொடிகள்
பூராகத் தெரிந்தாலும் தொடர்ந்துண்ணுவோம்
கொலஸ்ட்ரோலும் கொல் நோயும்
முழுசாக வந்தாலும்
தளராமல் தொடர்ந்திங்கு
இதை உண்ணுவோம்
-விதி மாற்ற முடியாதே

LEAVE A REPLY