7 மாதங்களில் 10 சிறுத்தைகள் பலி

0
48

tigerஇலங்கைக்கு மட்டும் உரித்தானதும் மிக அரிதாகக் காணப்படுவதுமான சிறுத்தை இனத்தைச் சேர்ந்த பத்து சிறுத்தைகள் கடந்த ஏழு மாதங்களில் மலையகப் பகுதிகளில் இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் காரியாலயம் அறிவித்துள்ளது.

அக்கரபத்தனை, நோவூர்ட், போன்ற பிரதேசங்களில் மட்டும் கடந்த 8ஆம் 9ஆம்திகதிகளில் அடுத்தடுத்து இவ்வாறு சிறுத்தைகளது உடற்பாகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏழு மாதங்களில் கொலை செய்யப்பட்டு, பொறியில் சிக்கி அல்லது ஏதேனும் செயற்கையான நிகழ்வுகளால் உயிரிழந்த பத்து சிறுத்தைகளில் உடல்கள் பற்றி பொலிஸாருக்கும் வனஜீவராசிகள் காரியாலயத்திற்கும் அறியக்கிடைத்துள்ளன.

சில தினங்களுக்கு முன் ஒரே இடத்தில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கண்டு பிடிக்கப்பட்ட இரண்டு சிறுத்தைகளதும் உடலில் எதுவித காயங்களும் இல்லாத நிலையிலே அவை மரணித்துள்ளன.

எனவே இவை நஞ்சு கொடுத்து அதாவது இறைச்சி வகைகளுடன் நஞ்சைக் கலந்து சிறுத்தைகள் நடமாடும் இடங்களில் வைத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வனஜீவராசிகள் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கைகே உரித்தான சிறுவகைப் புலி இனமான மேற்படி சிறுத்தைகள் அழிவது அல்லது அழிக்கப்படுவது பாரிய சவாலாக மாறி வருவதாகவும் இவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவை அதிகளவில் மலையகப் பகுதிகளில் மட்டும் நடமாடுவது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY