இரண்டு பிள்ளைகளின் தாய் பாலியல் துஷ்பிரயோகம்: சந்தேக நபர்களுக்கு மீண்டும் 14 நாள் விளக்கமறியல் நீடிப்பு

0
18

(ஏ.எச்.ஏ. ஹுஸைன், பழுலுல்லாஹ் பர்ஹான், ஜுனைட்.எம்.பஹ்த்)

court judgementsகாத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி – கர்பலா பிரதேசத்தில் 24.04.2016 அன்று இரவு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரையும் எதிர்வரும் மே 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி உத்தரவிட்டார்.

இது தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் காத்தான்குடிப் பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் செவ்வாய்க்கிழமை 10.05.2016 ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்களில் ஒருவர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிலும் மற்றவர் கல்கிஸைப் பொலிஸ் பிரிவிலும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இவர்கள் குறித்த பெண்ணை முச்சக்கர வண்டியொன்றில் ஒன்றில் ஏற்றி கர்பலா பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதாக கருதப்படும் இரு பிள்ளைகளின் தாயான 38 வயதுடைய பெண், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY