பெண் புரட்சியும் பேஷ்புக்கும்

0
163

facebook-silhouette-girlபெண் பற்றி பேஷ் புக்கில்
பெரிதாக செய்தி வரும்-அதை
பின் தொடர்ந்து தன் கருத்தை
பதிவார்கள் பலபேர்கள்.

தன் மனம் உண்மையிலே
தட்டிக் கேட்க நினைத்தாலும்
தன் மானம் போகும் படி
தாறுமாறாய் ஏச்சு விழும்
என்பதனால் இதுவன்றோ
பெண் புரட்சி என்று சொல்லி
பெரிதாகப் புகழ்ந்துரைப்பார்
சரிதான் என உரைப்பார்.

இன்னும் சில பேர்கள்
எழுதினால் பலாய் வரலாம்
என்னும் நோக்கத்தில்
எழுதாது இருந்திடுவார்.

குர் ஆனும் ஹதீஸும்
கொண்டு விவாதிப்பார்.
பிர் அவ்ன் மனைவி முதல்
பின்லேடன் மனைவி வரை
ஆதாரம் சமர்ப்பிப்பார்
சேதாரமும் ஆகிடுவார்.

பெண்ணின் விடயத்தை
பேஷ்புக்கில் எழுத முன்னால்
தன் வீட்டுப் பெண் மணிகள்
முன் வந்தால் இதைச் செய்ய
உண்மையில் உள் மனதால்
உடன் படுவீர் என்றிருந்தால்

இன்ன விடயம் சரி என்று
இயம்புவீர் இல்லையெனில்
என் உம்மா உம்மா என்றும்
உன் உம்மா சும்மா எனும்
நிலையெடுத்து எழுத வேண்டாம்
விலை வம்பு தவிர்த்திடுவோம்.

LEAVE A REPLY