போட்டிப் பரீட்சை மூலம் தெரிவான அதிபர்களுக்கான செயலமர்வு காத்தான்குடியில்

0
175

(எம்.ரி.எம்.யூனுஸ்)

IMG_20160509_120521-1024x575கிழக்கு மாகாணத்தில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு நடாத்தப்பட்ட தரம் III போட்டிப் பரீட்சையில் சித்தியெய்திய அதிபர்களுக்கான கிழக்கு மாகாண செயலமர்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நேற்று (09) திங்கட்கிழமை இடம்பெற்றது.

போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவான 350 அதிபர்கள் பங்குகொண்ட செயலமர்வு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.எம்.நிஸாம் தலைமையில் இடம்பெற்றது.

17 கல்வி வலயங்களிலிருந்தும் தெரிவான சிங்கள தமிழ் முஸ்லிம் அதிபர்கள் பங்கு கொண்ட ஆரம்ப அங்குரார்ப்பண செயலமர்வில் விரிவுரையை எம்.ஏ.எம்.உவைஸ் நிகழ்த்தினார்.

முப்பது நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறவுள்ள செயலமர்வு 8 இடங்களில் இடம்பெறவுள்ளது. இதற்கான கடிதம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரினால் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.

IMG_20160509_120422-1024x575 IMG_20160509_120445-1024x575 IMG_20160509_131515-1024x575

LEAVE A REPLY