முஸ்லிம்களின் விகிசாரத்திற்கேற்ப பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இருக்க வேண்டும்: பிரதி அமைச்சர் அமீர் அலி

0
189

(வாழைச்சேனை நிருபர்)

Ameer Ali 01முஸ்லிம்களின் விகிசாரத்திற்கேற்ப பாராளுமன்றத்தில் ஆசனங்கள் இருக்க வேண்டும். அது எந்தக்கட்சியில் தெரிவு செய்யப்பட்டாலும் பரவாயில்லை, அப்போதுதான் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை நியாமாக தீர்க்க முடியும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அன்மையில் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் பங்குபற்றி கருத்துத்தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு பிரதி அமைச்சர் தெரிவித்தார் அங்கு மேலும் அவர் கூறுகையில்

இந்த நாட்டின் சிறுபான்மையினராக இருக்கின்ற முஸ்லிம்களும்,தமிழர்களும் தங்களது விகிதாசாரங்களுக்கேற்ற வகையிலான பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளும் வகையிலான தேர்தல் முறை மாற்றமே இந்த நாட்டிற்கு பயனுள்ளதாக சிறந்ததாக அமையும் அந்த வகையில் சிறுபான்மையினரை கவனத்தில் கொள்ளாத தேர்தல் முறைகள் வெற்றி அளிக்கும் என நான் நம்பவில்ல. எனவே எதிர்காலத்தில் முன் மொழியப்படுகின்ற உத்தேச தேர்தல் முறையானது தமிழர்களினதும்,முஸ்லிம்களினதும் அபிலாஷைகளை நிவர்த்தி செய்கின்ற,அந்த மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்கின்ற,அவர்களுக்கு நம்பிக்கை தருகின்ற வகையில் அமைய வேண்டும். அதுவே கடந்த கால யுத்தத்தின் கோரப்பிடியில் அகப்பட்டு நொந்து போயுள்ள அந்த மக்களுக்கான ஆறுதலான விடயமாகும்.

எனவே இந்த விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாகவே காய்நகர்த்துகிறோம்,சிறுபான்மையாக வாழுகின்ற மக்களுக்கு அநீதி ஏற்படுத்துகின்ற எந்த தீர்வுத்திட்டத்தையும் நாங்கள் அங்கீகரிக்கப்போவதில்லை.இந்த நல்லாட்சி சிறுபான்மை சமூகத்தின் விடயத்தில் வெளிப்படையானதாக நடந்து கொள்ளும் என்ற நல்லெண்ணம் எங்களுக்கு இருக்கிறது. இரண்டு சிறுபான்மை சமூகங்களும் ஒற்றுமையுடனும்,விட்டுக்கொடுப்புடனும் தமக்கான தீர்வுத்திட்டங்கள் பற்றி எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலான திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY