சாதிக் கான் வென்ற பின் உரையாற்றியபோது அவருக்கு தன் முதுகை காட்டி நின்ற வேட்பாளர்

0
157

London-Mayoral-Election-resultலண்­டனின் புதிய மேய­ராக சாதிக் கான் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்­ளதை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்கும் நிகழ்வில் மேயர் சாதிக் கான் உரை­யாற்­றி­ய­போது, மேடை­யி­லி­ருந்து, பிரிட்­டனின் வலது சாரி கட்­சி­யொன்றைச் சேர்ந்த போட்­டி­யாளர் ஒருவர் சாதிக் கானுக்கு மறு­பு­ற­மாக திரும்பி நின்று தமது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தினார்.

போல் கோல்டிங் எனும் இவர், லண்டன் மேயர் பத­விக்கு பிரிட்டன் ஃபெர்ஸ்ட் எனும் கட்சியின் சார்பில் போட்­டி­யிட்­டவர். இத்­தேர்­தலில் தொழிற்­கட்சி வேட்­பா­ள­ரான சாதிக் கான் வெற்­றி­பெற்­றதை அறி­விக்கும் நிகழ்வு லண்­ட­னில நேற்­று­முன்­தினம் நடை­பெற்­றது. சாதிக் கான் உட்­பட பல கட்­சி­க­ளி­னதும் மேயர் வேட்­பா­ளர்கள் கலந்­து­கொண்­டனர்.

இதில் சாதிக் கான் உரை­யாற்­றி­ய­போது, அவ­ருக்கு தனது முதுகை காட்டும் வித­மாக போல் கோல்டிங் திரும்பி நின்றார். இரண்­டா­மிடம் பெற்ற கன்­சர்­வேட்டிவ் கட்சி வேட்­பாளர் ஸாக் கோல்ட்ஸ்மித் உரை­யாற்ற ஆரம்­பித்­த­போதே போல் கோல்டிங் மீண்டும் சரி­யான நிலைக்குத் திரும்­பினார்.

முஸ்லிம் ஒருவர் லண்டன் மேய­ராக தெரி­வு­செய்­யப்­பட்­டதை ஆட்­சே­பிப்­ப­தற்­காக போல் கோல்டிங் இவ்­வாறு திரும்பி நின்றார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. போல் கோல்டிங் நடவடிக்கையை தொழிற்கட்சி எம்.பி.கேர்ல் டேர்னர் உட்பட பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

#MetroNews

LEAVE A REPLY