(Photos) அக்கரைப்பற்றில் மாபெரும் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு: பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

0
28

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

IMG_2231இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு ஒன்று நேற்று முன்தினம் (07) சனிக்கிழமை அக்கரைப்பற்று பாலத்தடி மரச்சோலையில் இடம்பெற்றது.

‘சுவனம் நோக்கிய பயணம்’ என்ற தொனிப்பொருளில் காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை இடம்பெற்ற இம்மநாட்டில், பிரபல உலமாக்களான அப்துல் ஹமீத் ஷரயி, முர்ஸித் அப்பாஸி, ஜாபிர் ஷரபி, நியாஸ் ஸிராஜி, அன்ஸார் தப்லீகி, அப்துல் கனி ஹாமி, சாபித் ஷரயி, அன்சார் மக்கி, ஹாதில் ஹக் அப்பாஸி, அர்ஹம் இஹ்சானி, ஆஸிக் ஸலபி உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

மேற்படி மாநாட்டில் அம்பாறை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, மருதமுனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஆண், பெண்கள் என சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

குறித்த மாநாட்டில் சுவனம் நோக்கிய பயணம், சுன்னாவைப் புரிந்து கொள்வது எப்படி?, அபூர்வ சக்தியா? ஏமாற்று வித்தையா?, இஸ்லாத்திற்கெதிரான பகுத்தறிவு வாதம், நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய இஸ்லாமிய வாரிசுரிமை, மறுமையின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள்,சுவனம் செல்லும் கணவன் மனைவி போன்ற சுவனம் செல்லும் கணவன் மனைவி போன்ற சுவனம் செல்லும் கணவன் மனைவி போன்ற முக்கிய தலைப்புக்களில் உரைகள் நிகழ்த்தப்பட்டு சந்தேகங்களுக்கான தீர்வுககளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_2217 IMG_2221 IMG_2222 IMG_2228 IMG_2229 IMG_2230 IMG_2232 IMG_2233 IMG_2234 IMG_2235 IMG_2236

LEAVE A REPLY