புத்தளம் கடற்பரப்பில் கஞ்சா கடத்தல், 5 இந்தியர்கள் கைது (Video)

0
163

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்திய இந்தியர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

160505114535_lanka_ganja_512x288_bbc_nocredit

160505114813_lanka_ganja_512x288_bbc_nocredit

இப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்துக்கொண்டிருந்த மீனவ படகொன்றை சோதனைக்குட்படுத்திய கடற்படையினர், அதிலிருந்து 114 கிலோ கிராம் எடைகொண்ட கேரளா கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

https://youtu.be/QBkwIDYP0Ak

இந்த படகிலிருந்து இந்திய மீனவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒருவர் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவன் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு உணவு ஏதேனும் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை கடற்பரப்புக்குள் வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் என பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

-BBC Tamil-

LEAVE A REPLY