ஏறாவூரில் திறந்து வைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை முழு கிழக்கு மாகாணத்திற்குமுரியது

0
194

(விசேட நிருபர்)

Eravur-Town.12ஏறாவூரில் கடந்த மாதம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை முழு கிழக்கு மாகாணத்திற்குமான ஆடைத்தொழிற்சாலையாகும் மாறாக ஒரு சமூகத்திற்குமாத்திரமான ஆடைத்தொழிற்சாயைல்ல அதனால்தான் அந்த வைபவத்திற்கு தமிழ் முஸ்லிம் சிங்கள் மக்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகம் வெளியிட்டு;ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஆடைத்தொழிற்சாலை திறந்து வைக்கும் வைபவத்தில் ஏறாவூர் மக்களை விட சிங்கள மக்களை ஏற்றி இறக்கியதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் அன்மையில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் பிராந்திய அலுவலகம் வெளியிட்டு;ள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு ஆடைத்தொழிற்சாலையை இந்த நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த ஆடைத்தொழிற்சாலை ஏறாவூருக்கு மாத்திரம் சொந்தமானதல்ல முழு கிழக்கு மாகாணத்திற்குமுரியது என்பதால் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து இன மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாக ஏறாவூர் மக்களும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர் என்பதை அங்கு வந்தவர்களிடம் கேட்டு;பார்த்தால் தெரிந்து கொள்ளமுடியும்.

இந்த ஆடைத்தொழிற்சாலை திறப்பு விழா வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா மற்றும் முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க வில்லையெனவும் மாகாண சபை உறுப்பினர் சுபைர் அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த வைவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா மற்றும் முன்னாள் அமைச்சர் கசீர்; சேகுதாவூத் உட்பட மாகாண சபை உறுப்பினர் சுபைருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா இந்த வைபவத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரைக்கும் கலந்து கொண்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் நாட்டில் இல்லாததால் கலந்து கொள்ளவில்லை. அதே போன்று மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஆனால் மாகாண சபை உறுப்பினர் சுபைரினால் அந்த வைபவத்தை ஜீரணிக்க முடியாததால் அதனை தவிர்ந்து கொண்டிருந்தார்.

அத்தோடு ஏறாவூர் கல்வி வீழ்ச்சிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரே காரணம் என முதலமைச்சரை மாகாண சபை உறுப்பினர் சுபைர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒரு முதலமைச்சர் என்ற வகையில் பௌதீக வளத்தையும் ஆசிரியர் வளத்தையும் பெற்றுக் கொடுக்கமுடியும். ஆனால் முதலமைச்சர் பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு படிப்பிக்க முடியாது.

கல்வி வீழ்ச்சிக்கு அதிபர்களையும் ஆசிரியர்ளையும் அதிகாரிகளையுமே காரணம் காட்டவேண்டிய நிலையில் முதலமைச்சரை குற்றம் சுமத்துவது சிறு பிள்ளைத்தனமானதாகும். வளங்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் முதலமைச்சரினால் பார்க்க முடியும்.

கற்பிப்பவர்கள் ஆசிரியர்கள் அதனை மேற்பார்வை செய்பவர்கள் அதிபர்களும் கல்வி வலய அதிகாரிகளுமாகும்.

கடந்த காலங்களில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தை வைத்துக் கொண்டு சிலர் அரசியல் செய்ததை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். ஏறாவூர் பாடசாலைகளுக்கு தேவையான வளங்கள் மற்றும் பௌதீக வளங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன் ஆசிரியர் வளமும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டி வைக்க விரும்புகின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY