கஞ்சாவுடன் இளைஞர் கைது!

0
167

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

Arrestஅம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். நபரொருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொது மக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் ஞாயிற்றுக்கிழமை இரவு (08.05.2016) மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைது இடம் பெற்றுள்ளது.

நற்பிட்டிமுனை ஆலையடி வடக்கு வீதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த 22 வயதான நபரிடமிருந்து 2 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY