தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் ஊடக பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரல்

0
155

(எம்.ரி.எம்.யூனுஸ்)

job-applicationஊடகத்துறையில் ஆர்வமும் விருப்பும் கொண்ட இளம் ஊடகவியலாளர்களை வலுவூட்டும் நோக்கில் தேசிய இளைஞர் சேவை மன்றம் ஊடக வேலைத்திட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதற்காக நேர்முகப்பரீட்சை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலங்களில் ஒருப்பிரிவில், 25 பேர் வீதம் 50 பேருக்கு விரிவுரைகள் மற்றும் செயன்முறை பயிற்சிகள் என்பன நிபுணத்துவமிக்க ஊடகக்குழுவின் முலம் வழங்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வானொலி, தொலைக்காட்சிகளுக்கும் மற்றும் அச்சு ஊடகங்களுக்கும் தற்போதும் பிரதேச மட்டத்தில் செய்தி வழங்குகின்ற புதியவர்களுக்கு இதில் முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதோடு தங்களால் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2016 மே மாதம் 15ம் திகதிக்கு முன்னர் உதவி பணிப்பாளர் (ஊடகப்பிரிவு) தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், ஹய்லெவல் வீதி, மஹரகம எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும்.

மேலதிக தகவல்களுக்கு : 0112 839015

LEAVE A REPLY