(Photos) பொலன்னறுவை மொரகஸ்வெவயில் கார் கெண்டர் மோதி விபத்து: சிறுமி உட்பட இருவர் காயம்

0
21

(முஹம்மட் அன்ஸி)

WhatsApp-Image-20160508 (3)பொலன்னறுவை மொரகஸ்வெவயில் கார் ஒன்றுடன் கெண்டர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று (08) மாலை 7.30 மணியளவில் பொலன்னறுவை மொரகஸ்வெவ எனும் பகுதியில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் பிரதான வீதியல் இடம்பெற்றுள்ளது.

வீதியின் வளைவில் அதிவேகமாக வானகம் செலுத்தியதாலேயே இந்த விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் இவ்விபத்தில் காரில் சென்ற சிறுமி உட்பட காரை ஓட்டிச் சென்றவரும் கடும் காயங்களுடன் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிசைக்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

கார் சாரதியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை மின்னேரிய பொலீசார் மேட்கொண்டு வருகின்றனர்.

WhatsApp-Image-20160508 (1) WhatsApp-Image-20160508 (4) WhatsApp-Image-20160508 (5) WhatsApp-Image-20160508 (6) WhatsApp-Image-20160508 (7) WhatsApp-Image-20160508 (9)

LEAVE A REPLY