நாட்டுக்கு சேவையாற்றிய சிறந்த முஸ்லிம் தலைவர் ஹிஸ்புல்லாஹ் : முன்னாள் அமைச்சர் ரோஹித

0
73

இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாரிய சேவையாற்றி சிறந்த முஸ்லிம் தலைவர்களுள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மிக முக்கியமானவர் என முன்னாள் அமைச்சரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டினார்.

நிதி குறைநிரப்பு சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
நாங்கள் முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசும் போது அரச தரப்பிலுள்ள முக்கியமானவர்கள் இருக்க வேண்டும். தற்போது, எனது நண்பர் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாத்திரமே நாடாளுமன்ற அமர்வில் உள்ளார்.

அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டவர். தனது சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியாக தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் சானக்கியமாக செயற்படக் கூடியவர்.

இவர் தனது பிரதேசத்துக்கு மாத்திரமல்லாது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் பாரிய பங்களிப்பு செய்து வருகிறார். – என புகாழாரம் சூட்டினார்.

LEAVE A REPLY