( Poem) மாடி

0
18

(Mohamed Nizous)

அம்மாடி பெரிதா
இம்மாடி பெரிதா?
அம்மாடி ஊருக்குள்
அத்தனை மாடிகள்.
மா-மாடி கட்டியது
மாமாடி மருமகனுக்கு.
தாமாக மாடி கட்டும்
தம்பிமாரும் உள்ளார்கள்.

கோடிகள் செலவழித்து
மாடியைக் கட்டியபின்
நாடிய படி மாப்பிள்ளை
தேடி எடுக்கின்றார்.

வருகின்ற மாப்பிள்ளை
பெறுகின்ற வருமானம்
இருமாடி பில் கட்ட
பெரும்பாலும் போதாது.

அதனால மேல்மாடி
விதம் விதமா டிசைன் போட்டும்
எதுவுமே விளங்காமல்
இருட்டாகிக் கிடக்கிறது.

இடம் போதா என்பதற்காய்
இருமாடி கட்டுவது
கடமையான செயலாச்சு
கண்டிக்க முடியாது.

என்றாலும் சில ஆட்கள்
தன்மதிப்பைக் காட்டுதற்காய்
அங்க இங்க கடன் வாங்கி
வங்கிலயும் அடகு வெச்சு
பங்களா கட்டிய பின்
வங்குறோத்து ஆகுவதை
எங்கு போய்ச் சொல்ல
இங்குள்ள நிலை இது.

LEAVE A REPLY