உணவு ஒவ்வாமை: தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதி

0
143

souteastern-university Oluvilஉணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களே உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என அம்பாறை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் விடுதியில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்பே நேற்றிரவு மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் மாணவப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

#News1st

LEAVE A REPLY