ஏறாவூர் முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய தலைவராக வகாப்தீன் 53 வாக்குகளினால் தெரிவு

0
133

(விஷேட நிருபர்)

Eravurஏறாவூர் முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய தலைவராக வி.எம்.வகாப்தீன் 53 வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏறாவூர் முச்சக்கர வண்டி சாரதிகள் நலன்புரிச் சங்கத்தின் புதிய நிருவாகத் தெரிவுக்கான பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் (06) ஏறாவூர் அல் ஜிப்ரியா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் எம்.சஹீட்டின் முன்னிலையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தலைவர் தெரிவுக்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் வி.எம்.வஹாப்தீன் 53 வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

இவருடன் போட்டியிட்ட வை.சி.ஹயாத்து முகம்மட் என்பவர் 23 வாக்குகளை பெற்றார்.

இதன் செயலாளராக எஸ்.சாஹீர் மற்றும் பொருளாளராக எஸ்.எல்.ஹுஸைன், உப தலைவராக ஏ.நூர்தீன், உப செயலாளராக யு.எல்.சுபைதீன், உட்பட 17 பேர் நிருவாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY