கொக்கட்டிச்சோலையில் கடத்தப்பட்ட சிறுமி பத்து நாட்களின் பின் மீட்பு: சந்தேக நபர் கைது

0
171

(விஷேட நிருபர்)

arrestedமட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கடத்தப்பட்ட 16 வயதுடைய சிறுமி பத்து நாட்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (06) இரவு மீட்கப்பட்டுள்ளதுடன் சிறுமியை கடத்திய நபரையும் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 27.4.2016 அன்று கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் மாலைநேரம் பிரத்தியோக வகுப்புக்குச் சென்று திரும்புகையில் அரசடித்தீவில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவரினால் குறித்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டார்.

கொக்கட்டிச் சோலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 11ல் கல்வி கற்கும் மேற்படி சிறுமியை கண்டு பிடித்து தருமாறு கோரி பெற்றார் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தனர்.

இது தொடர்பில் விசாரணை செய்து வந்த பொலிசார் சிறுமியை கடத்திய 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் எனவும் இது தொடர்பான விசாரணை இடம் பெற்றுவருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.

கடத்தப்பட்ட சிறுமியை கண்டு பிடித்து த்தருமாறு கோரியும் பொலிசார் இது தொடர்பில் உரிய நடவடிக்கை இதுவரை எடுக்க வில்லையெனவும் தெரிவித்து சிறுமியின் பெற்றோர் மட்டக்களப்பு மனி உரிமைகள் ஆணைக்குழுவிடம் (4.5.2016) முறைப்பாடு ஒன்றை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY