(Poem) அன்(னை)னியர் தினம்

0
13

Beautiful-Happy-Mothers-Day(Mohamed Nizous)

பாலூட்டி வளர்த்த கிளி
பழங்கொடுத்துப் பார்த்தகிளி
தாலாட்டு நிதம் பாடி
தன் பிள்ளை வள்ர்த்த கிளி
தோலொட்டி தன்வாழ்வின்
தொங்கலிலே நின்றிருக்கா.

ஆலஊட்டு மூலையிலே
அந்த உம்மா படுத்திருக்கா
வேலவெட்டி என்று சொல்லி
வீட்டுக்கே வராதிருக்கும்
மூளகெட்ட பிள்ளைகளின்
முகம் பார்க்க தவித்திருக்கா.

எல்லாம் முடிந்த பின்பு
ஸ்பீக்கரில் பெயர் சொல்ல
எல்லோரும் வருவாக
இருட்டுக் கத்தம் ஓதுவாக
அல்லாஹ்தான் இவர்களுக்கு
அறவழியைக் காட்ட வேண்டும்
நல்ல படி வாழுதற்கு
நாயன் அருள வேண்டும்.

கருவிலே சுமந்தவளை
கண்காணா மடத்தினிலோ
தெருவிலோ விட்டு விட்டு
திரும்பியும் பாராது
ஒரு நாள் வருடத்தில்
ஒதுக்கிச் சென்று பார்த்து
பெருமையாய் ஷெல்பி எடுத்து
பேஷ்புக்கில் போடுதற்கு
அன்னையர் தினம் என்று
ஆக்கினார் வெள்ளையர்கள்.

தினமும் அன்னையரின்
திருப்தியுடன் வாழுவது
கனமான நன்மை தரும்
மணமான வாழ்வுதரும்
அன்னையர்க்கு தினம் ஒதுக்கி
அன்னைக்கு மாத்திரமே
எண்ணுவதும் எழுதுவதும்
எங்களது வழியல்ல.

என்னைக்கும் அன்பாக
இருக்கின்ற ஜீவன்கள்
இன்னைக்கும் எழுதுவதில்
ஏதும் தப்பில்லை.
இன்னைக்கு மாத்திரமே
இயம்புவது ஒப்பில்லை.

LEAVE A REPLY