மட்டக்களப்பில் இசை நிகழ்சி எனக்கூறி போலி டிக்கட் விற்பனை: இருவர் விளக்க மறியலில்

0
222

(விஷேட நிருபர்)

S3500015காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்ட போலி இசைக்கச்சேரிக்கு டிக்கட் விற்பணை செய்த இரண்டு சந்தேக நபர்களும் எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலுள்ள பிரபல இசைக் குழுவொன்றின் பெயரில் மட்டக்களப்பில் இசை நிகழ்ச்சி நடாத்துவதாக கூறி போலியான முறையில் டிக்கட் விற்பனை செய்து பெருமளவில் பணம் சம்பாதித்த இருவரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவர் யாழ்ப்பாணத்தையும் மற்றவர் மட்டக்களப்பையும் சேர்ந்தவர் என பொலிசார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 10 ம்திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா நேற்று (07) சனிக்கிழமை உத்தரவிட்டார்.

S3500007அச்சு மற்றும் இலத்தினியல் ஊடக நிறுவனங்களின் அனுசரணையுடன் கருணா இசைக்குழுவரின் இசை கிகழ்ச்சி 7ம் திகதி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு கல்லடி சிவானந்தா விளளையாட்டு மைதானத்தில் நடைபெறுவதாக கல்முனை, வாழைச்சேனை, மட்டக்களப்பு உட்பட மாவட்டத்தின் பல இடங்களிலும் 100 ரூபாய் மற்றும் 250 ரூபாய் பெறுமதியான டிக்கட்களை இவர்கள் விற்பனை செய்துள்ளனர்.

3 இலட்சம் ரூபாய் வரை டிக்கட் விற்பனை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மோசடி நபர்களிடமிருந்து 187 டிக்கட் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக மேலும் ஒருவரை பொலிசார் தேடி வருவதாக பொலிசார் குறிப்பிட்டனர்.

மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்கவின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

S3500001 S3500006 S3500008 S3500009 S3500010 S3500018

LEAVE A REPLY